• May 24 2025

நாயகனின் அடுத்த அதிரடி...ரகுமான் Live..!– சினிமா உலகையே அதிரவைக்கும் 'தக் லைஃப்' இசை விழா!

subiththira / 5 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா வரலாற்றில் சில கூட்டணிகள் எப்போதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்ற வகையில் காணப்படும். அந்தவகையில் 36 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள் உலகநாயகன் கமல்ஹாசனும் மற்றும் கலைமாமணி இயக்குநர் மணிரத்தினம். இந்த இருவரும் இணைந்து உருவாக்கியிருக்கும் புதிய திரைப்படம் தான் ‘தக் லைஃப்’ (Thug Life).


இந்தப் படம் குறித்து தற்போது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகின்றது. அந்த எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தும் வகையில், ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை மாலை நடைபெறவுள்ளது. இந்த விழா குறித்து படக்குழு வெளியிட்டுள்ள புதிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

1987ம் ஆண்டு வெளியான 'நாயகன்' திரைப்படம் தமிழ் சினிமாவின் வரலாற்றை மாற்றியமைத்தது. இப்போது, 2024-ல் மீண்டும் கமல் மற்றும் மணிரத்தினம் இணையும் 'Thug Life' படம், ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.


இப்படத்தில் கமல்ஹாசன் மட்டுமின்றி, சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, பாலிவுட் நடிகர் அலி பசல் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இசைஞானி ஏ.ஆர்.ரகுமான், இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜூன் 5-ம் திகதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதற்கு முன்னதாக, மே 24-ம் திகதி மாலை 5 மணிக்கு சென்னை சாயிராம் பொறியியல் கல்லூரியில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் பிரமாண்டமாக நடைபெற்று வருகின்றன.


படக்குழுவின் தகவலின்படி, இந்த இசை விழாவில் ஏ.ஆர். ரகுமான் தனது இசையை Live பெர்பாமென்ஸாக நடத்தவுள்ளார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இது ஒரு மறக்க முடியாத ஷோவாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.


Advertisement

Advertisement