• Sep 17 2024

குக்வித் கேமாளி நிகழ்ச்சியில் சர்ச்சை-இது வேண்டவே வேண்டாம்- நடிகை வித்யூலேகா அதிர்ச்சி வீடியோ

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரசிகர்களிடத்தே அதிக வரவேற்ப்பு பெற்று வருகின்றது.அந்தவகையில் இதில் ஹிட்டாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி தான் குக்வித் கோமாளி.இந்த 3ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டிருக்கிறார் காமெடி நடிகை வித்யூலேகா. அவர் திருமணமாகி செட்டில் ஆகிவிட்ட நேரத்தில் தான் குக் வித் கோமாளி வாய்ப்பு வந்தது. அதை ஏற்றுக்கொண்டு அவர் தற்போது CWC 3ல் பைனல் வரை முன்னேறி இருக்கிறார்.

அத்தோடு கடந்த வாரம் ஒளிபரப்பப்பட்ட வைல்டு கார்டு எபிசோடில் கிரேஸ் கருணாஸ் அவரது advantage பயன்படுத்தி முத்துகுமாரிடம் இருந்த sweet potatoவை வாங்கிக்கொண்டார். இதனால் முத்துக்குமார் டென்சன் ஆனார்.

அதை பற்றி கிரேஸ் கருணாஸ் "அவர் காண்டாகிட்டார்" என கூற.. அதற்கு வித்யூலேகா 'ஆனால் ஆகட்டும், நீங்க போட்டியில் இருந்து எலிமினேட் ஆகி இருக்கீங்க, அவர் செமி பைனல் வரை வந்துவிட்டார். நீங்க அதை புரிஞ்சிக்கோங்க' என தெரிவித்தார்.

இதை பார்த்த ரசிகர்கள் 'வித்யூலேகாவுக்கு முத்துக்குமார் மேல என்ன கோபம்' என கேட்டு வருகின்றனர். அதற்க்கு தற்போது இன்ஸ்டாகிராமில் பதில் அளித்துள்ளார் வித்யூலேகா.

"அவர் மேல ஒரு சொட்டு நெகடிவ் பீலிங் கூட இல்லை. அவர் talented cook, பைனலிஸ்ட் ஆக வந்திருக்க வேண்டும் என்று கூட சொன்னேன். கிரேஸ் அக்காவை ஊக்கப்படுத்த தான் நான் அப்படி பேசினேன்" என தெரிவித்து இருக்கிறார்.

இதையடுத்து பிக் பாஸ் வாய்ப்பு வந்தால் போவீங்களா என கேட்டதற்கு, "ஒரு fun ஷோ குக் வித் கோமாலியிலேயே controversy create பண்ண பாக்குறாங்க, பிக் பாஸ் எல்லாம் போனால்.. வேண்டவே வேண்டாம். நான் நல்லா இருக்கேன்" என கூறி இருக்கிறார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement