• Apr 28 2024

சொதப்பலில் முடிவடைந்த இறைவன் படம். அட மொத்த வசூல் இவ்வளவு தானா?

sarmiya / 6 months ago

Advertisement

Listen News!

இயக்குனர் அஹமத் மனிதன் படத்தினை தொடர்ந்து   நீண்ட இடைவேளைக்கு பிறகு 'இறைவன்' படத்தை இயக்கியுள்ளார். இதில் ஜெயம் ரவி, நயன்தாரா இருவரும்  இணைந்து நடித்துள்ளனர். மேலும் ராகுல் போஸ், நரேன், விஜயலட்சுமி, வினோத் கிஷன் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.



இந்நிலையில் நேற்றைய தினம் வெளியாகியுள்ள 'இறைவன்' படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றன. இதனால் பாக்ஸ் ஆபிஸிலும் இப்படம் சொதப்பியுள்ளது. முதல் நாளில் இப்படம் ரூ. 2.50 கோடியில் இருந்து ரூ. 3 கோடி வரையில் மட்டுமே வசூல் செய்துள்ளது. பெரிதும் திரில்லர் திரைப்படமாக எதிர்பார்க்கப்பட்ட இப்படம்  தொடர்ந்து எதிர்மறையான  விமர்சனங்களை பெற்றுவருவது  ரசிகர்கள் இடையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement