• May 06 2024

ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறும் சித்தா திரைப்படம். முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

sarmiya / 7 months ago

Advertisement

Listen News!

நடிகர் சித்தார்த் தனது தயாரிப்பிலும் பிரபல இயக்குநர் SU.அருண் குமார் இயக்கத்திலும்,நடிகர் சித்தார்த் மலையாள நடிகை நிமிஷா சஜயன் நடிப்பிலும் வெளிவந்த படம் தான் சித்தா.



இப்படம்  பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை பற்றிய கதையை எதார்த்தமாக கொண்ட சினிமாவாக வெளிவந்திருக்கின்றது. இப்படத்தை சித்தார்த்தே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ETAKI எண்டர்டெயின்மெண்ட்’ மூலம் தயாரித்து வெளியிட்டுள்ளார்.



எந்த ஒரு பெரிய எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியான  இந்த படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் சித்தா திரைப்படம் முதல் நாளே ரூபாய் 1.50 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.

Advertisement

Advertisement

Advertisement