தமிழ் சினிமாவில் புதுமுக நடிகைகளுக்கு எப்போதும் தனி வரவேற்பு உள்ளது. அதிலும், பிரபல நடிகர்களுடன் நடிக்க கிடைக்கும் வாய்ப்பு ஒரு பெரிய ஜாக்பாட் என்றே கூறலாம். தற்போது இப்படிப்பட்ட ஜாக்பாட் அடித்த நடிகையாக கயாடு லோகர் உள்ளார்.
இந்திய திரையுலகில் ‘டிராகன் நாயகி’ என அழைக்கப்படும் கயாடு லோகர், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு உடன் STR 49 படத்தில் கதாநாயகியாக இணைந்துள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்தத் தகவல் வெளியானதுமே ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் இதனைக் கொண்டாடி வருகின்றார்கள்.
அண்மையில் வெளியான ‘டிராகன்’ படத்தில் சிறப்பாக நடித்து மக்களின் மனங்களைக் கவர்ந்த கயாடு லோகர், தற்போது தமிழ் சினிமாவில் பெரிய வாய்ப்பை பெற்றிருக்கின்றார். பொதுவாக STR படங்களில் ஹீரோயினிகள் முக்கியத்துவம் பெறுவார்கள். அதனால், கயாடு லோகருக்கும் இந்த படம் ஒரு பெரிய ஹிட்டாக இருக்கலாம் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
நடிகைகள் முன்னணி ஹீரோக்களுடன் நடிக்க ஆரம்பித்துவிட்டால், அவர்களின் திரையுலக பயணமே மாறிவிடும். அதுபோல் கயாடு லோகர் STR 49 மூலம் தமிழ் ரசிகர்களுக்கு விருப்பத்துக்குரிய நடிகையாக மாற போகின்றார் எனச் சிலர் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
Listen News!