சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, ரோகிணி வெத்தலைல மை போட்டுப் பாக்கிறத ஸ்ருதி நக்கல் அடிச்சுக் கொண்டிருக்காள். அதைக் கேட்டு முத்து சத்தமா சிரிக்கிறான். பிறகு வெத்தலைல மை போட்டுப் பாக்க வந்தவர் இவங்கள் எல்லாம் தன்னை அவமதிப்பதாகச் சொல்லி அங்கிருந்து வெளிக்கிடுறார். பின் ஸ்ருதி பொலீசாலேயே திருட்டுப் போன பொருளைக் கண்டு பிடிக்க முடியா நீங்க வெத்தலைல மை போட்டு கண்டுபிடிச்சுருவீங்களோ என்று கேக்கிறாள்.
அதைத் தொடர்ந்து மீனா அப்புடி எல்லாம் கண்டுபிடிக்க முடியும் என்றா வெத்தலை எல்லாம் தங்க விலையில எல்லோ இருக்கும் என்கிறாள். பிறகு முத்து மனோஜைப் பாத்து இவன் ஒரு படிச்ச லூசு எல்லாத்தயும் நம்பிக் கொண்டிருப்பான் என்கிறான். அதுக்கு மனோஜ் இங்க பாருங்க நீங்க என்ன வேணுமென்டாலும் சொல்லுங்க என்ர காச எப்படியாவது நான் வாங்கிடுவேன் என்கிறான்.
அதைக் கேட்ட முத்து இனி என்ன வாழையிலைல மை போட்டுப் பாக்கப் போறியோ என்று கேக்கிறான். அதுக்கு எல்லாரும் சிரிக்கிறார்கள். பின் மீனாவும் முத்துவும் கதைத்துக் கொண்டிருக்கும் போது மீனா உங்க அண்ணாவுக்கு படிப்பறிவு இருக்கிற அளவுக்கு பகுத்தறிவு இல்ல என்று சொல்லுறாள். பிறகு முத்து நாம இந்தக் காசக் கண்டுபிடிச்சு அப்பாட்ட கொடுப்பம் என்று சொல்லுறான்.
பின் காலைல மனோஜுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை ரோகிணி சொல்லுறாள். பிறகு வேளைக்கு வெளிக்கிட்டு வா உனக்கு நான் நிறைய சப்ரைஸ் வச்சிருக்கேன் என்று ரோகிணி சொல்லுறாள். அதைத் தொடர்ந்து வீட்டில இருக்குற எல்லாரும் மனோஜுக்கு கேக் வெட்டிக் கொண்டாடுகிறார்கள். பின் எல்லாரும் பரசு அங்கிளின்ர கலியாணத்துக்கு வெளிக்கிட்டுப் போகிறார்கள். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!