• May 21 2024

சேலையில் ரசிகர்களை கிறங்கடித்த தொகுப்பாளினி டிடி-வைரலாகும் புகைப்படங்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியின் பெண் பிரபலங்களில் ஒருவராக வலம் வருபவர் தொகுப்பாளினி திவ்ய தர்ஷினி. டிடி என அனைவராலும் செல்லமாக அழைக்கப்படுகின்ற இவரை தெரியாதவர்கள் என்று யாருமே இருக்க மாட்டார்கள். அந்தளவிற்கு தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது ஆனாலும் சரி, பிரபலங்களை பேட்டி காண்பதாயினும் சரி இவருக்கு நிகராக யாருமே இல்லை என்று கூறலாம்.

இவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகளில் காபி வித் டிடி, ஜோடி நம்பர் ஒன் ஆகிய நிகழ்ச்சிகளை என்றுமே நம்மால் மறக்க முடியாது.விஜய் டீவியின் செல்லப்பிள்ளை என்றாலே அது நம்ம டிடி தான். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மட்டுமல்லாது விருது விழா, திரைப்படங்களின் ப்ரமோஷன் விழா உள்ளிட்ட பலவற்றையும் தொகுத்து வழங்கி இருக்கின்றார்.

தொலைக்காட்சிகளில் மட்டுமன்றி மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான டிடி தொடர்ந்து தமிழில் 'ஜூலி கணபதி, விசில், நளன்தமயந்தி' உள்ளிட்ட பல படங்களிலும் நடித்திருக்கின்றார். அது மட்டுமன்றி தற்போது பல படங்களில் தொடர்ந்து நடித்தும் வருகின்றார். இந்நிலையில் இவருக்கு தற்போது சின்னத்திரையில் மட்டுமன்றி வெள்ளித்திரையிலும் பல ரசிகர்கள் உள்ளனர்.

சின்னத்திரை, மற்றும் வெள்ளித்திரைகளில் பிஸியாக இருப்பதை போலவே டிடி சமூக வலைத்தளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருக்கக் கூடியவர். அவ்வப்போது ஹாட் போட்டோஷூட்களை செய்து அவற்றை இணையத்தில் பதிவிட்டும் வருவார்.

இதே போன்றே தற்போதும் தமிழ்நாட்டு பெண்களை போல சேலையணிந்து போட்டொஷூட் நடாத்தி அதனை இணையத்தில் தெறிக்க விட்டு வருகின்றார். அதனை பார்த்த ரசிகர்கள் தமது லைக்ஸ் மற்றும் கமெண்டுகளை அள்ளி குவித்து வருகின்றார்கள்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement