• May 06 2024

திருமணத்திற்கு ரெடியாகும் ஹரிஷ்... அதிர்ச்சியில் ரசிகைகள்

tech / 1 year ago

Advertisement

Listen News!

சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். தொடர்ந்து அரிது அரிது, சட்டப்படி குற்றம், பொறியாளன்,வில் அம்பு போன்ற சில தமிழ் படங்களில் நடித்து இருந்தார். இருப்பினும் இவருக்கு பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி தரவில்லை.

பின்னர் கடந்த 2017-ஆம் ஆண்டு விஜய் டிவி-இல் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார் இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தான் ஹரிஷ் கல்யான் ரசிகர்கள் அதிகமான அதன்பிறகு அவர் நடித்த பியார் பிரேமா காதல் மற்றும் இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் ஆகிய இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் ஆகி இருந்தது.

அதன்பின் இவர் விவேக் நடிப்பில் வெளியாகியிருந்த தாராள பிரபு திரைப்படத்தில் நடித்தார். ரொமான்டிக் காமெடியாக உருவாகி இருந்த படம் ரசிகர்ளிடம் பெரும் வரவேற்பை பெற்று ஒரு ரசிகர் பட்டாளத்தை கொன்டுள்ளார்.

தற்போது 100 கோடி வானவில், டீசல் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் ஹரீஷ். தற்போது டீசல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி தற்போது வரவேற்பு பெற்று வருகின்றது.

இந்நிலையில் நடிகர் ஹரிஷுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாகவும், பெண் தேடும் வேலையில் பெற்றோர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர் என்றும் கூறப்படுகிறது. மேலும் இவரது திருமணம் ஆகஸ்ட் இறுதியில் அல்லது செப்டம்பர் தொடக்கத்தில் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement