• May 07 2024

‘டான்’படத்தின் ப்ரீ-ரிலீஸ் விழாவை சிறப்பாக கொண்டாடவுள்ள படக்குழு- அதுவும் எப்போது தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் தான் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் அறிமுகமாகிய இவர் தனது அயராத நடிப்பினால் தனக்கென்று ஓர் இடத்தைப் பிடித்துள்ளார். அந்த வகையில் இவரது நடிப்பில் தற்பொழுது டான் என்னும் படம் உருவாகியுள்ளது.

இப்படம் அடுத்த வாரம் மே 13ம் திகதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாளை சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் பிரம்மாண்ட விழா நடைபெற உள்ளதாகவும், இந்த விழாவில் படத்தின் ட்ரெய்லரும் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிகழ்விற்கு கோலிவுட்டின் பிரபல நட்சத்திரம் விருந்தினராக வருவார்களாம்.இந்த படம் ஒரு நகைச்சுவை கல்லூரி காதல் படம் என்று கூறப்படுகிறது. மேலும் இதில் பிரியங்கா மோகன் மற்றும் எஸ் ஜே சூர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மேலும், இந்த படத்திற்கு அனிரூத் தனது பிளாக் பஸ்டர் ஹிட் இசையை தானமாக கொடுத்துள்ளார். சமீபத்தில் இவரது இசையில் இப்படத்திலிருந்து வெளியான அனைத்து பாடல்களும் செம்ம வைரலாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement