• May 18 2024

வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் ரிலீஸ் திகதி அறிவிப்பு

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. மாநாடு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்பொழுது கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது.

இத்தோடு இந்தப் படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் சித்தி இத்னானி கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் மற்றொரு நடிகை ராதிகா சரத்குமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தற்போது, இப்படத்தின் முதல் பாடல் வரும் மே 6-ம் தேதி வெளிவரவுள்ளது. அதாவது, நாளை இப்படத்தின் முதல் சிங்கிளான “காலத்துக்கும் நீ வேணும்” என்ற பாடல் நாளை மாலை 6.30 அன்று வெளியாகும் என படக்குழு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதற்கிடையில், மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து பல எதிர்பார்ப்புகளுடன் இப்படத்தின் வெளியீட்டிற்கு ரசிகர்கள் காத்திருந்த நிலையில், படக்குழு இப்படத்தை ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி வெளியிட திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement