• May 19 2024

திரிஷாவின் காதல் நெருப்பை பற்ற வைத்த பிரபல இயக்குநர்

Thiviya / 1 year ago

Advertisement

Listen News!

சினிமாவில் தற்போது தனது கொள்ளை கொள்ளும் அழகால் அனைத்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டு வருபவர் நடிகை திரிஷா. இவர் தனது திருமண முறிவுக்கு பின்னர் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகின்றார். 

அது மட்டுமல்லாது பல பேட்டிகளில் இவரது திருமணம் குறித்து வினாவினால் கோபப்படும் நிலைமை அவருக்கு ஏற்படுகின்றது. அதுமட்டுமல்லாது திருமணத்தை தள்ளிப் போட்டுக் கொண்டே வருகின்றார். அதேபோல் நடிகர் சிம்புவும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகின்றார். இவரது வயது ஏறிக்கொண்டே வருகின்றது.

ரசிகர்கள் பலரது எதிர்பார்ப்பு திரிஷாவும் , சிம்புவும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதேயாகும். இருப்பினும் அது குறித்து எந்த அறிகுறிகளும் காணப்படவில்லை. மேலும் கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் விண்ணைத்தாண்டி வருவாயா இதில் திரிஷாவும் , சிம்புவும் நடித்திருந்தனர். 

இவர்களின் கெமிஸ்ட்ரி திரைப்படத்தில் அட்டகாசமாக இருந்தது. தற்போது கௌதம் இதன் இரண்டாம் பாகத்தை இயக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இத்திரைப்படத்தில் மீண்டும் சிம்புவும் திரிஷாவும் நடித்தால் நிச்சயம் இவர்கள் திருமணம் செய்து கொள்வார்கள் என்று தமிழ் சினிமா வட்டாரத்தில் கருதப்படுகின்றது. 


Advertisement

Advertisement