• May 11 2024

உலக நாயகனுடன் கை கோர்க்கும் நவரச நாயகன்… அதுவும் இந்தப் படத்திலா..?

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா உலகம் கொண்டாடும் முக்கியமான கதாநாயகர்களில் ஒருவர் நடிகர் கமல் ஹாசன். உலக நாயகன் என சிறப்பாகப் போற்றப்படுகின்ற இவருக்கு தமிழ் நாட்டில் மட்டுமன்றி உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர் கூட்டம் உண்டு. அதுமட்டுமன்றி இவர் நடிப்பில் உருவான படங்கள் ஏராளம். அதில் பல படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்திருக்கின்றன.

இந்த நிலையில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியிருந்த 'விக்ரம்' திரைப்படம் மாபெரும் வசூலினை பெற்று சாதனை படைத்திருந்தமை யாவரும் அறிந்த ஒன்றே. இதனைத் தொடர்ந்து கமல் ஹாசன் நடிப்பில் உருவாகி பல ஆண்டுகளாக காத்திருப்பில் இருக்கும் படம் 'இந்தியன் 2'. இப்படத்தில் கமல் ஹாசன் இரண்டு வித்தியாசமான தோற்றத்தில் நடிக்க உள்ளார். இதற்காக ஒரு மாத பயணமாக அமெரிக்க சென்றுள்ளார் உலக நாயகன்.

இவருடன் இணைந்து மறைந்த நடிகர் விவேக் மற்றும் நெடுமுடி வேணு முக்கிய வேடத்தில் நடித்து வந்த இந்த படமானது 2020 இல் நிறுத்தப்பட்டது. இதற்கு காரணம் அப்போது துரதிஷ்டமா விபத்தின் காரணமாக சினிமா தொழிலாளர் உயிரிழந்தமையால் படம் பாதியில் நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் நீண்ட காலமாக இந்த படப்பிடிப்பு குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.

தற்போது இந்த படத்தை மீண்டும் தயாரிப்பதற்கு திட்டமிட்டு வருகின்றனர் படக்குழுவினர். இப்படத்தின் மூலம் கமலஹாசன்-சங்கர் கூட்டணி மீண்டும் இணைக்கின்றது. அந்தவகையில் இப்படம் குறித்து மற்றுமோர் தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது இதில் நவரச நாயகன் கார்த்திக் இணையுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் கார்த்தி பங்கேற்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement