• May 12 2024

அறிமுக நடிகை அதிதிக்கு இவ்வளவு சம்பளமா..? இதற்கான காரணம் என்ன..? கிளம்பிய எதிர்ப்புக்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர்களில் ஒருவராக வலம் வருகின்ற ஷங்கரின் இளைய மகளே அதிதி. இவர் தற்போது தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி உள்ளார். அதாவது தமிழில் இவருக்கான அறிமுகத்தை கொடுக்கின்ற படம் 'விருமன்'. இப்படத்தை 'கொம்பன், மருது' போன்ற படங்களை இயக்கிய முத்தையா இயக்கி உள்ளார். இதில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக அதிதி நடிக்கின்றார்.

வித்தியாசமான கதையம்சத்தைக் கொண்டு உருவாகி வருகின்ற இப்படமானது 12-ஆம் தேதி வெளியாகவுள்ளது. கார்த்தி ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தை அவரது அண்ணனாகிய சூர்யா தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து தயாரித்துள்ளார். இப்படமானது வெளிவருவதற்கு முன்பே அதிதி ஷங்கர் தன்னுடைய அழகினால் பல ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டுள்ளார்.

அதுமட்டுமன்றி இவருக்கு பட வாய்ப்புக்களும் அடுத்தடுத்து தேடி வரத் தொடங்கியுள்ளன. அதாவது 'விருமன்' படத்தை தொடர்ந்து அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து 'மாவீரன்' என்ற படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியிருக்கின்றார் அதிதி. இப்படத்தின் அதிகாரபூர்வமான அறிவிப்பு சமீபத்தில் தான் வெளிவந்திருந்தது.

இந்நிலையில் சமீபத்தில் அதிதி ஷங்கர் தொடர்பான மற்றுமோர் அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. அதாவது விருமன் படத்திற்கு அதிதிக்கு ரூ. 25 லட்சம் சம்பளமாக வழங்கப்பட்டிருக்கின்றது. அதுமட்டுமன்றி இதுவரைக்கும் அதிதி ஷங்கரின் நடிப்பில் ஒரு படம் கூட திரையில் வெளியாகாத நிலையில், ஒரு அறிமுக நடிகைக்கு ரூ. 25 லட்சம் சம்பளமாக தரப்பட்டுள்ளது எப்படி எனும் விமர்சனங்களும் கோலிவுட் வட்டாரத்தில் சமீபத்தில் எழுந்திருக்கின்றன.

அதுமட்டுமன்றி எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் வரும் அறிமுக நடிகைகளுக்கு தரப்படாத சம்பளம், ஷங்கரின் மகள் தான் அதிதி ஷங்கர் என்பதால் கொடுக்கப்பட்டுள்ளதா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். சம்பளத்திற்கு ஏற்ற மாதிரி அதிதி தன்னுடைய நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கின்றாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement