• May 20 2024

விக்ரம் ரசிகர்களுக்கு காத்திருந்த தீபாவளி ஸ்பெஷல்... ஆனந்தக் கடலில் மூழ்கிய ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தன்னுடைய விடாமுயற்சியினாலும், கடின உழைப்பாலும் தனக்கென ஒரு தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கிய ஒருவரே நடிகர் சீயான் விக்ரம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகின்ற இவர் ஏராளமான படங்களில் நடித்திருக்கின்றார்.


அந்தவகையில் தற்போது சீயான் விக்ரம் நடிப்பிலும் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்திலும் உருவாகி வரும் திரைப்படம் 'சீயான் 61'.

ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் கே.ஜி.எப் மக்கள் குறித்த திரைப்படமாக இருக்கும் என பலராலும் கூறப்படுகின்றது.


இந்நிலையில் தற்போது தீபாவளி ஸ்பேஷலாக 'சீயான் 61' திரைப்படத்தின் டைட்டில் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ இன்று வெளியாகும் என படக்குழுவினரால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.


அதுமட்டுமல்லாது இது குறித்த போஸ்டரையும் இன்றைய தினம் வெளியிட்டு இருக்கின்றனர் படக்குழுவினர்.  கேட்டதும் நம்ம விக்ரம் ரசிகர்கள் சும்மா இருப்பாங்களா.? அப்பிடியே சந்தோசத்தில் மிதந்திட்டே இருக்காங்க. 

Advertisement

Advertisement