• Jan 19 2025

ஈஸ்வரி மேட்டருக்கு சீக்கிரமே முற்றுப்புள்ளி வைத்த டைரக்டர்.. இப்போ என்ன பண்ணுவீங்க கோபி?

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சுவாரஸ்யமாக ஒளிபரப்பாகி வருகின்றது.

இன்றைய தினம் இடம்பெற்ற எபிசோட்டில், ஈஸ்வரிக்கு ஜாமீன் வாங்கி விடலாம் என்ற நம்பிக்கையில் பாக்கியா இருக்க, ஈஸ்வரியின் மகனான கோபி அளித்த வாக்குமூலம் அத்தனையையும் சுக்கு நூறாய் உடைத்து விட்டது.

இந்த நிலையில் தற்போது வெளியான ப்ரோமோவின் பாக்கியா மையூவை பார்ப்பதற்காக ஸ்கூலுக்கு செல்கிறார். அங்கு மையூ ஒன்று சொல்ல வேண்டும் என பாக்கியாவிடம் சொல்லுகிறார்.

இதனால் பாக்கியா என்னவென்று கேட்கவும், அம்மா தவறி விழுந்தப்ப நானும் அங்க தான் இருந்தேன். அம்மா பூவாஸ் தடக்கி தான் கீழே விழுந்தாங்க. ஈஸ்வரி பாட்டி அவங்களுக்கு ஹெல்ப்த் தான் பண்ணினாங்க என உண்மையை சொல்லுகிறார்.


இதனால் சந்தோஷம் அடைந்த பாக்கியா, மையூவை கட்டிப்பிடித்துக் கொள்கிறார். அதன்பின் பழனிச்சாமியுடன் அட்வகேட்டை சந்திக்கின்றார்.

சென்ற பாக்கியாவிடம் வக்கீல் மையூவை கோர்ட்டில் உண்மையை சொல்ல, வைத்தால்தான் இதிலிருந்து தப்பிக்க முடியும் என சொல்ல, குழந்தையை எப்படி கோர்ட்டுக்கு அழைத்து வருவது என கேட்கின்றார் பாக்கியா.

ஆனாலும் எப்படி என்றாலும் மையூவை கோர்ட்டில் அழைத்து வந்து உண்மையை சொல்ல வைக்க வேண்டும் என வக்கீல் சொல்லுகிறார். இதுதான் தற்போது வெளியான ப்ரோமோ.

இதேவேளை தற்போது பாக்கியாவுடன் இணைந்து பழனிச்சாமி ஈஸ்வரி பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த நிலையில், இந்த உண்மையை கோபி அறிந்தால் சந்தோஷப்படுவாரா அல்லது பழனியுடன் இணைந்து முயற்சிக்கு முட்டுக்கட்டையாக நிற்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement