• Mar 09 2026

கதிரை பளாரென கன்னத்தில் அறையும் பாண்டியன்.. கோமதி எடுத்த அதிர்ச்சி முடிவு..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் சற்றுமுன் வெளியான ப்ரோமோ வீடியோவில் பாண்டியன் ஆத்திரத்தில் கதிர் கன்னத்தில் பளாரென அடிக்கும் காட்சிகள் உள்ளன.

’கதிர் இனிமேல் கண்ட நேரத்தில் வேலைக்கு சென்று உடம்பை கெடுத்துக் கொள்ள வேண்டாம், காலேஜ் முடித்தவுடன் கடைக்கு வந்து வேலை செய்யட்டும், ராஜி மற்றும் கதிர் செலவுகளை நானே பார்த்துக்கொள்கிறேன்’ என்று பாண்டியன் சொல்கிறார்.



அப்போது கதிர் ’முடியாது’ என்று கூறுவதோடு ’என்னை நானே பார்த்துக் கொள்ள முடியும், உங்களுக்கு எப்படி பணம் கொடுக்க வேண்டும் என்பதும் எனக்கு தெரியும்’ என்று கூறுகிறார். இதனால் ஆத்திரம் அடையும் பாண்டியன் கதிர் கன்னத்தில் பளாரென அடித்ததோடு உனக்கு அவ்வளவு திமிரா என்று கேட்கிறார்.

இதை அடுத்து மிகவும் வருத்தப்படும் கோமதி, என்னால்தான் என் பையன் பல துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறான், நான்தான் அவனுக்கு திருமணம் செய்து வைத்தேன் என்று உண்மையை கூறப் போகிறேன்’ என்று சொல்லியபோது ராஜி, மீனா அதிர்ச்சி அடைவதுடன் இன்றைய ப்ரோமோ முடிவுக்கு வருகிறது.

Advertisement

Advertisement