• Sep 20 2024

கோப்ரா படத்தின் எக்ஸ்குளுசிவ் போஸ்டரை வெளியிட்ட படக்குழு- செம குஷியில் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

இமைக்கா நொடிகள் என்னும் வெற்றிப்படத்தை இயக்கியவர் தான் அஜய் ஞானமுத்து. இவர் தற்பொழுது நடிகர் விக்ரமை வைத்து கோப்ரா என்னும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக கே.ஜி.எப் திரைப்பட நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து வருகின்றார்.

அத்தோடு இப்படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், கே.எஸ். ரவிக்குமார், ஜான் விஜய் ஆகியோர் படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை செவன் ஸ்கிரீன்ஸ் சார்பில், தயாரிப்பாளர் லலித் தயாரித்துள்ளனர்.

கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பானது தற்பொழுது நிறைவடைந்து போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோப்ரா படத்தின் எக்ஸ்குளுசிவ் போஸ்டரை படக்குழு சற்று முன் வெளியிட்டுள்ளது.

வித்தியாசமான வெளியாகி உள்ள அந்த போஸ்டரை ரசிகர்கள் கொண்டாடி வருவதோடு இத்திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 11ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement