விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இறுதியாக ஃபேமிலி ரவுண்ட் நடைபெற்றது. இதன்போது ஹவுஸ்மேட்ஸின் உறவினர்கள் வீட்டிற்கு வந்தது சுவாரஸ்யமாக காணப்பட்டது.
இந்த நிலையில் இந்த வாரம் யார் வெளியேற்றப்படுவார்கள், யார் காப்பாற்றப்படுவார்கள் என்ற லிஸ்ட் வெளியாகியுள்ளது.
அதன்படி தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய இன்னும் 3 வாரங்களே மீதம் உள்ளன. அதில் அடுத்த வாரம் டிக்கெட் டு பினாலே டாஸ்க் இடம்பெறும். அதன் பின்பு பணப்பெட்டி டாஸ்க்கும், இறுதியாக டைட்டில் வின்னருக்கான போட்டியும் இடம்பெறும்.

அந்த வகையில் தற்போது கடும் போட்டியாளர்களாக சபரி, கனி, அரோரா, பார்வதி, சாண்ட்ரா, விக்ரம் மற்றும் வினோத் ஆகியோர்கள் காணப்படுகின்றனர். எனவே இவர்களுள் ஒருவர் பணப்பெட்டியை எடுக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.
இதன் காரணத்தினால் தற்போது மக்களின் ஆதரவை பெற்று வரும் அரோரா வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த வாரம் அரோரா காப்பாற்றப்பட்டால் அடுத்த வாரம் பணப்பெட்டி எடுப்பதற்கு முயற்சி பண்ணலாம், அல்லது முதல் ஐந்து இடங்களுக்குள் அரோரா வந்துடலாம்.
இதனால் அவரை வெளியேற்ற வேண்டும் என எலிமினேஷன் பண்ணி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் விஜய் டிவியின் மெயின் ப்ரொடக்ட் ஆக சாண்ட்ரா காணப்படுகின்றார். எனவே அவரை சேவ் பண்ணியதாகவும், பார்வதியை சேவ் பண்ணியதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.
Listen News!