• Apr 16 2026

‘தி ராஜா சாப்’ படத்தில் மாளவிகா மோகனனின் கரெக்டர் இதுதானா.? வெளியானது பர்ஸ்ட்லுக் போஸ்டர்

shali / 3 months ago

Advertisement

Listen News!

பான் இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படங்களில் ஒன்றாக உருவாகி வருகிறது ‘தி ராஜா சாப்’. நடிகர் பிரபாஸ், இயக்குநர் மாருதி கூட்டணியில் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது.


 ரொமான்டிக் ஹாரர் என்டர்டெய்னர் ஜானரில் தயாராகும் இந்த படம், அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

பிரபாஸ் நடித்துவரும் இந்த படத்தில், மாளவிகா மோகனன், நிதி அகர்வால் மற்றும் ரித்தி குமார் ஆகியோர் முக்கிய பெண் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். குறிப்பாக, மாளவிகா மோகனன் இந்த படத்தில் இணைந்த தகவல் வெளியானதிலிருந்து, அவரது கதாபாத்திரம் குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வம் நிலவி வந்தது. 

அந்த எதிர்பார்ப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தற்போது படக்குழு மாளவிகா மோகனனின் First Look போஸ்டரை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.


‘தி ராஜா சாப்’ திரைப்படத்தில் மாளவிகா மோகனன், பைரவி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. First Look போஸ்டரில், மாளவிகா மோகனன் ஒரு மர்மமும், அழகும் கலந்து காணப்படும் தோற்றத்தில் இடம் பெற்றுள்ளார். 

அவரது பார்வை, உடை வடிவமைப்பு மற்றும் பின்னணி காட்சி ஆகியவை, படத்தின் ரொமான்டிக் ஹாரர் தளத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. இந்த First Look போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. 

Advertisement

Advertisement