• Apr 01 2023

“அதுதான் மயில்சாமி”- வலைத்தளத்தில் வைரலாகும் மறைந்த நடிகர் விவேக்கின் பேச்சு

Prema / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான விவேக் உடன் இணைந்து பல படங்களில் நகைச்சுவை காட்சிகளில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை சிரிக்க வைத்தவர் நடிகர் மயில்சாமி. விவேக்கின் மரணத்தைத் தொடர்ந்து தற்போது மயில்சாமியும் இறந்து விட்டார். 

இந்நிலையில் சினிமா விழா ஒன்றில் நடிகர் மயில்சாமியின் கொடை உள்ளத்தை பற்றி விவேக் பேசிய கருத்துக்கள் தற்போது சமூக வலைதளங்களில்  தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது.


அந்தவகையில் விவேக் கூறுகையில் "மயில்சாமி இருக்கானே அவன் என்னை விட வயசில் பெரியவன் தான், ஆனாலும் வாடா போடான்னு சொல்லிப் பழகிட்டோம். இவன் இளிச்சவாயானா நல்லவனா என்றால் இளிச்சவாயன்/நல்லவன்னு தான் சொல்லணும். இப்படியொரு மனுஷன் நம்முடன் வாழ்வதே பெரிய விஷயம். பாரதிராஜா கிட்ட இவன பத்தின விஷயங்களை சொன்னால், மயில்சாமி பண்ண செயல்களை வைத்தே ஒரு படத்தை எடுத்திடுவார்" என கிண்டலாக பேசி உள்ளார்.


மேலும் "சுனாமி பாதிப்பு ஏற்பட்டு கடலூர் பகுதியில் ஒரு கிராமத்திற்கு பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் சென்று உதவி செய்வதை அறிந்த மயில்சாமி அங்கே சென்று தான் ஆசையாக எம்ஜிஆர் பதக்கம் போட்டு அணிந்திருந்த தங்க செயினை விவேக் ஓபராய் கழுத்தில் போட்டு விட்டு அவருடன் ஒரு வார்த்தை கூட பேசாம வந்துட்டார். கொஞ்சம் நின்னு இருந்தா அவர் இந்தியில் பேசுவது புரியாமல் எப்படி சமாளிக்கிறதுன்னு யோசித்திருப்பான்" எனவும் மிகவும் நகைச்சுவையாக விவேக் மயில்சாமியை பற்றி பேசியது ரசிகர்களை தற்போது உருக வைத்துள்ளது.


அதுமட்டுமல்லாது "ஒரு 10 ஆயிரம் ரூபாய் வந்தா கஷ்டப்படுறங்களுக்கு எல்லாம் கொடுத்து விட்டு கடைசியில என் கிட்ட வந்து ஆட்டோக்கு போகணும் ஒரு 50 ரூபாய் கொடு மச்சான்னு கேப்பான். ஒரு நாள் பணக்காரனா இருப்பான். ஒரு நாள் பிச்சைக்காரனா இருப்பான். அதுதான் மயில்சாமி" எனவும் கூறியிருக்கார்.

அத்தோடு "வீட்டுல பாரதியாரின் மனைவி ஏதாவது சம்பாதித்து விட்டு அரிசி வாங்கிட்டு வாங்கன்னு சொல்வாங்க, அவரும் அரிசி வாங்கிட்டு வரும் போது, காக்கா, குருவிகள் பசித்து கிடப்பதை பார்த்துட்டு காக்கை குருவி எங்கள் சாதி என அந்த அரிசியை அதுங்களுக்கு போட்டுட்டு வீட்டுல வந்து வாங்கிக் கட்டிப்பாரு, மயில்சாமியும் அப்படித்தான்" எனவும் கூறியுள்ளார்.


இவ்வாறு விவேக் மயில்சாமியைப் பற்றிப் பேசியிருப்பதன் வாயிலாக, மயில்சாமி ஒரு சிறந்த கோடை வள்ளல் என்பதனை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

Advertisement

Advertisement

Advertisement