• Mar 23 2023

லியோ படத்திற்கு வந்த சிக்கல்.. முக்கிய பிரபலத்தின் தாயார் மரணம்.. இரங்கல் தெரிவிக்கும் திரையுலகம்..!

Prema / 1 month ago

Advertisement

Listen News!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் லியோ. இப்படத்தில் பல ஆண்டுகளுக்குப் பின்னர் விஜய்யுடன் இணைந்து திரிஷா நடிக்கிறார். மேலும் அவர்களுடன் இணைந்து அர்ஜுன், சஞ்சய் தத், கவுதம் மேனன், மிஸ்கின் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களும் நடிக்கிறார்கள்.


இப்படத்தினுடைய படப்பிடிப்புகள் ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மேலும் லியோ திரைப்படத்தின் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமாம்ஸா என்பவர் கமிட்டாகியுள்ளார். இவர் 'பீஸ்ட், ஈரம்' உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கும் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமாம்ஸாவின் தாயார் நேற்று காலமாகியுள்ளார். இதனால் மனோஜ் பரமாம்ஸா படப்பிடிப்பிலிருந்து சென்னைக்கு திரும்பியுள்ள சென்னைக்குத் திரும்பியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் தனது தாயின் இறுதிச் சடங்கு பணிகளை கவனித்து வருகிறார். இவரின் மறைவிற்கு திரையுலகை சேர்ந்த பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement