• Sep 26 2023

அடேங்கப்பா...400 கோடி வசூலை கடந்து மாஸ் காட்டும் ஜெயிலர் - ஆச்சரியத்தில் திரையுலகம்..!

Jo / 1 month ago

Advertisement

Listen News!

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, ரம்யா கிருஷ்னன், வசந்த் ரவி, சுனில், யோகி பாபு, விநாயகன் என நட்சத்திர பட்டாளமே நடித்த ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.


ஜெயிலரில் இறக்கி ஆக்‌ஷனையும் மாஸ் காட்சிகளையும், காமெடி, குடும்பம், குத்துப் பாட்டு என அத்தனை கமர்ஷியல் ஃபார்முலாக்களையும் இறக்கியதன் விளைவாக கூடுதலான வசூல் வேட்டையை நிகழ்த்தி வருகிறது.

இந்நிலையில்  வெளியான 6 நாட்களில் 400 கோடி வசூலை கடந்துள்ளதாக அண்மைத் தகவல்கள் வெளியாகி உள்ளன. 


கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் மொத்த வசூல் 420 கோடி ரூபாயாக உள்ள நிலையில், அந்த படத்தின் வசூலை விரைவில் ஜெயிலர் முறியடித்து விடும் என்றும் ஒரு பக்கம் அந்த படத்தின் வசூலை இன்று இரவுக் காட்சியுடன் ஜெயிலர் படம் முறியடித்து விட்டது என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால், இதுவரை சன் பிக்சர்ஸ் எந்தவொரு அதிகாரப்பூர்வ அப்டேட்டையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இனிவரும் காலங்களில் ஒட்டுமொத்தமாக 1000 கோடி வரை வியாபாரம் செய்யும் இந்த படம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பொறுத்திருந்து பார்ப்போம். 

Advertisement

Advertisement

Advertisement