• Sep 27 2023

நியூஜெர்சியில் சுதந்திர தினம் கொண்டாடிய நடிகை தமன்னா! லைக்குகளை அள்ளிக்குவிக்கும் ரசிகர்கள்..!

Jo / 1 month ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக நடிகை தமன்னா திகழ்கிறார்.தற்போது வெளியான சூப்பர் ஸ்டார் நடித்த ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருந்தார்,இப்படத்தில் 'காவாலாயா' பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருந்து ரசிகர்கலை வெகுவாக கவர்ந்திருந்தது.ட்ரெண்ட்டிங்காவே தற்போதுவரை காணப்படுகிறது.


நடிகை தமன்னா நியூஜெர்சியில் சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட வீடியோவை பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அந்த வீடியோவின் அவர் பதிவு செய்திருப்பதாவது எனது சொந்த நாட்டில் இருந்து ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இந்திய சுதந்திர தின அணிவகுப்பின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் உற்சாகமடைகிறேன். பெருங்கடல்கள் என்னை நாட்டில் இருந்து பிரித்தாலும் இந்தியாவின் ஆவி எனக்குள் எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது.

நியூ ஜெர்சி தெருக்களில் வரிசையாக நின்ற ஆயிரக்கணக்கான சக இந்தியர்களை பார்த்தபோது என் மனம் உற்சாகமடைந்தது. இங்குள்ள அனைவரிடம் பழகுவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இந்த ஒற்றுமை தான் நமக்கு வேண்டும்.என பதிவிட்டிருந்தார்.

இவ்வாறு இந்திய சுதந்திர தினத்தை  நியூஜெர்சியில் தமன்னா கொண்டாடிய வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.



Advertisement

Advertisement

Advertisement