• May 20 2024

கைதி படத்தின் ஸ்டைலில் தான் தளபதி 67 திரைப்படம் உருவாகின்றதா?-குழப்பத்தில் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் தனக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கி கொடி கட்டிப் பறந்து வரும் நடிகர் தான் விஜய். இவர் தற்பொழுது இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு என்னும் படத்தில் நடித்து வருகின்றார்.இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்து வருகிறார். 

தமன் இசையமைப்பில் உருவாகும் இப்படதில் நட்சத்திரப் பட்டாளங்கள் ஏராளமானோர் நடித்து வருகின்றனர். மேலும் இதனை அடுத்து விஜய் லோகேஷ் கனகராஜின் படத்தில் நடிக்கவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது. இது குறித்த அப்டேட்டுகளும் அடிக்கடி வெளியாகிக் கொண்டிருக்கின்றது.


இந்த நிலையில், தளபதி 67 படத்தில் கதாநாயகி என்று யாரும் இல்லை என்றும் அதுபோலவே படத்தில் பாடல்களும் இல்லாமல் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட உள்ளதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் இப்போது ஒரு முக்கிய வேடத்தில் சமந்தா நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

இந்த படத்துக்கான செட் ஒன்று இப்போது சென்னையை அடுத்த பையனூரில் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. செட் பணிகள் நடப்பதால் விரைவில் ஷூட்டிங் தொடங்கிவிடும் எனக் கூறப்படுகிறது.

இது தவிர இன்னுமொரு தகவலும் கிடைத்துள்ளது. அதாவது தலைவா படத்திற்குப் பின், விஜய் இப்படத்தில் ஒரு மும்பை கேங்ஸ்டர் வேடத்தில் நடிப்பதாகவும், முழுக்க முழுக்க ஆக்சன் படமாக உருவாவதாகவும் தகவல் வெளியாகியுள்ளத என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement