• Nov 23 2024

அட்லி, நெல்சன் லோகேஷ் கனகராஜ் சம்பளம் இத்தனை கோடியா? ஹீரோ கூட வாங்காத சம்பளம்?

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

திரை உலகை பொருத்தவரை ஒரு சில ஹிட் படங்கள் கொடுத்து விட்டாலே கோடிகளில் சம்பளம் கிடைக்கும் என்பது ஹீரோவுக்கு மட்டுமல்ல இயக்குனர்களுக்கும் பொருந்தும் என்பது கடந்த சில ஆண்டுகளாக நிரூபணம் செய்யப்பட்டு வருகிறது

. குறிப்பாக ’மாநகரம்’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் அதன் பின்னர் ’கைதி’ ’மாஸ்டர்’ ’விக்ரம்’ ஆகிய படங்களை இயக்கிய நிலையில் தற்போது அவர் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ’கூலி’ என்ற படத்தை இயக்க உள்ளார். இந்த படத்திற்காக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அவருக்கு 60 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.

அதைப்போல் ’ராஜா ராணி’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகி அதனை அடுத்து விஜய் நடித்த ’தெறி’ ’மெர்சல்’ மற்றும் ’பிகில்’ ஆகிய படங்களை இயக்கிய அட்லி, ஷாருக்கான் நடித்த ’ஜவான்’ என்ற படத்தை இயக்கிய பின்னர் சம்பளம் எகிறி உள்ளது. அடுத்ததாக அவர் அல்லு அர்ஜுன் நடிக்க இருக்கும் படத்தை இயக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த படத்திற்காக அவருக்கு 60 கோடி சம்பளம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’கோலமாவு கோகிலா’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான நெல்சன் அதன் பின்னர் ’டாக்டர்’ ’பீஸ்ட்’ ஆகிய படங்களை இயக்கிய நிலையில் ரஜினிகாந்த் நடித்த சூப்பர் ஹிட் படமான ’ஜெயிலர்’ படத்தை இயக்கினார். இந்த நிலையில் அடுத்ததாக அவர் ’ஜெயிலர் 2’ படத்தை இயக்க இருப்பதாகவும் இந்த படத்திற்கு அவருக்கு 50 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தமிழ் திரை உலகில் பல ஆண்டுகளாக ஹீரோவாக நடிக்கும் நடிகர்கள் பலருக்கு இவ்வளவு சம்பளம் இல்லாத நிலையில் ஒரு சில படங்கள் மட்டுமே வெற்றி படங்கள் கொடுத்த இயக்குனர்களுக்கு கோடிக்கணக்கில் சம்பளம் குவிந்து வருகிறது என்று குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement