• Jun 26 2024

சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்- டீ கிளாஸ்,மற்று காப்புடன் வெளியாகிய அப்டேட்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வரும் சூர்யா தற்பொழுது வித்தியாசமான கதாப்பாத்திரங்களைத் தேர்ந்து எடுத்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றார். அந்த வகையில் கொரோனா காலத்தில் இவரது நடிப்பில் வெளியாகிய சூரரைப் போற்று திரைப்படம் 30 க்கும் மேற்கொண்ட சர்வதேச விருதுகளை வென்றுள்ளது.

இது தவிர லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற கதாப்பாத்திரத்தில் நெக்கட்டிவ் ரோலில் நடித்திருந்தார். இந்தப்படம் சூர்யாவின் இமேஞை வேற லெவலில் மாற்றியுள்ளது.

இந்நிலையில் ஜுலை 23 ம் தேதி சூர்யா தனது 47வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். சூர்யாவின் பிறந்தநாளை வேற லெவலில் கொண்டாட ரசிகர்கள் திட்டமிட்டுள்ளனர்.அதன்படி ரத்த தானம், அன்ன தானம் உள்ளிட்டவைகள் ஏற்பாடு செய்துள்ளனர்.

சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு சூர்யா 41 படத்தின் டைட்டில் வெளியிடப்படும் என சொல்லப்பட்டது. ஆனால் டைரக்டர் பாலாவின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்றே படத்திற்கு வணங்கான் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு காமன் டிபி ஒன்றை நாளை மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டீ கிளாஸ், பக்கத்தில் காப்பு இருப்பது போன்ற போஸ்டர் இதற்காக வெளியிடப்பட்டுள்ளது. சூர்யா பிறந்தநாளன்று வாடிவாசல், சூர்யா 42 படங்களின் அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சிடிபி வெளியிடப்பட உள்ளதால், இந்த பிறந்தநாள் சூர்யாவிற்கு மிகச் சிறந்த பிறந்தநாளாக இருக்கும் என்று கூறப்படுவதைக் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement