• May 16 2024

மறைந்த கவிஞர் நா.முத்துக்குமாரின் பிறந்தநாள் இன்று- நினைவு கூர்ந்து வரும் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ்த் திரையுலகில் பல சூப்பர் ஹிட் பாடல்களை எழுதிய கவிஞர்கள் வரிசையில் மிகவும் முக்கியமானவர் தான் நா முத்துக்குமார்.இவர் 2000 ஆண்டுகளில் ரசிகர்களைக் கவரும் விதமாக பல்வேறு பாடல்களை எழுதியிருக்கின்றார்.இதுவரை 1500 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார்.

காஞ்சிபுரத்தில் பிறந்து வளர்ந்த இவர் சிறு வயதில் தாயை இழந்து தந்தையின் அரவணைப்பிலேயே வளர்ந்தார்.1990 இறுதிகளில் சினிமாவுக்கு பாடல் எழுதத்தொடங்கிய இவர் தந்தையைப் பற்றி எழுதிய பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானவை.

அதனால் தான் என்னவோ நா.முத்துகுமார் என்றவுடன் எல்லோர் நினைவுக்கும் வருவது அவர் தந்தை சமூகத்துக்காக எழுதிய "தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே" பாடல் பெரிதாக பேசப்படுகிறதோ தெரியவில்லை. கல்லூரியில் பட்டம் பெற்றதோடு நிற்காமல், தமிழ் இலக்கியத்தில் பட்ட மேற்படிப்பு, முனைவர் பட்டமும் பெற்றார் நா.முத்துகுமார். படம் இயக்குவதில் ஆர்வம் கொண்ட அவர் நான்கு ஆண்டுகள் இயக்குநர் பாலு மகேந்திராவிடம் உதவியாளராக பணியாற்றியுள்ளார்.

2000-ம் ஆண்டில் தொடங்கி 16 ஆண்டுகள் தாம் மறையும் வரை 1500 பாடல்களை எழுதியுள்ளார்.ஏராளமான நூல்கள், கவிதை தொகுப்புகளையும் எழுதியுள்ளார். திருமணமாகி ஒரு மகன், மகள் உள்ள நிலையில் 2016 ஆம் ஆண்டு ஏற்பட்ட மஞ்சல் காமலை நோய் பாதிப்பில் திடீரென மாரடைப்புக் காரணமாக 41 வயதில் மரணமடைந்தார் . இது திரையுலகில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இவர் எழுதிய "காதல் வளர்த்தேன், காதல் வளர்த்தேன்" "நினைத்து நினைத்துப் பார்த்தால் நெருங்கி அருகில் வருவேன்" என்பன இன்றும் ரசிகர்களால் முனுமுனுக்கப்பட்டு வருகின்றது. இந்தப்பாடல்கள் தவிர யுவன் ஷங்கர் ராஜா, ஜிவி.பிரகாஷ் முத்துகுமார் காம்போ படைத்திட்ட பாடல்கள் அத்தனையும் எந்தக்காலத்திலும் மறக்காத பாடல்கள். இருவர் இசையிலும் தலா ஒரு தேசிய விருதை முத்துகுமார் பெற்றுள்ளார்.

அத்தோடு இவரின் வார்த்தைகளில் உள்ள ஜாலங்கள் தனி ரகம், கண்ணதாசனுக்கு பிறகு இயல்பாக மண்ணின் மனம் கலந்து ஆழமாக பாடலைக் கொடுத்தது முத்துக்குமார் எனலாம்.தங்க மீன்கள் படத்தில் அவரது "ஆனந்த யாழை மீட்டுகிறாய்" பாடல் அவருக்கு தேசிய விருதைப் பெற்றுத்தந்தது. அதேபோல் சைவம் படத்தின் "அழகே அழகே" என்ற பாடலுக்கும் சேர்த்து 2 முறை தேசிய விருது பெற்றார்.

இவ்வாறு பல அற்புதமான படைப்புகளை படைத்த இவர் இரண்டு முனைவர் பட்டங்களை பெற்றவர். 16 புத்தகங்களை எழுதியுள்ளார். அதில் குறிப்பிடத்தக்கவை, பட்டாம்பூச்சிகள் விற்பவன், நியூட்டனின் மூன்றாம் விதி, கிராமம் நகரம் மாநகரம், தூசிகள் உள்ளிட்டவைகளை சொல்லலாம். சில படங்களுக்கு அவர் வசனமும் எழுதியுள்ளார்.

வெயில் படத்தில் வரும் வெயிலோடு விளையாடி பாடல் ஜி.வி.பிரகாஷுக்காக எழுதிக்கொடுத்த முதல் பாடல். கிராம குழந்தைகளின் வாழ்க்கையை அப்பாடல் வரிகளில் அழகாக சொல்லியிருப்பார். யுவன், ஜி.வி.பிரகாஷ் இருவரும் முத்துக்குமாரின் மனதுக்கு நெருங்கியவர்கள். இருவருக்காக முத்துகுமார் எழுதிய 200 க்கும் மேற்பட்ட பாடல்கள் கிளாசிக் என்பார்கள். அவர் கடைசியாக எழுதிய பாடல் ராஜீவ் மேனனுக்காக சர்வம் தாள மயம் படத்துக்காக எழுதியது தான்.

இவ்வாறு பல பாடல்களை எழுதியவர் இந்த உலகத்தை விட்டுப் பிரிந்தாலும் என்றும் எம்மோடு நினைவில் இருக்கிறார் என அவரது ரசிகர்கள் அவருடைய பிறந்தநாளாகிய இன்று நினைவு கூர்ந்து வருவதையும் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement