• Jan 19 2025

’எதிர்நீச்சல் 2’ சீரியல்.. முதல்முறையாக அப்டேட் கொடுத்த இயக்குநர் திருச்செல்வம்..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

எதிர்நீச்சல் சீரியல் எதிர்பாராத வகையில் திடீரென முடிவடைந்த நிலையில் கடந்த சில வாரங்களாக ’எதிர்நீச்சல் 2’ சீரியல் குறித்த அப்டேட் வேண்டும் என்று ரசிகர்கள் தொடர்ச்சியாக கோரிக்கை எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் இயக்குனர் திருச்செல்வம் மறைமுகமாக ’எதிர்நீச்சல் 2’ சீரியல் குறித்த அப்டேட்டை அளித்துள்ளார்.

சன் டிவியில் ஒளிபரப்பான ’எதிர்நீச்சல்’ சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் திடீரென முடிக்கப்பட்டது. அதிலும் இந்த சீரியலின் முடிவு சுகமாக இல்லாமல் குணசேகரனை சிறைக்கு அனுப்பிவிட்டு ’இதுபோன்று நீங்கள் இன்னும் நிறைய குணசேகரன்களை வாழ்க்கையில் சந்திக்க வேண்டி இருக்கும் என்று அப்பத்தா, குணசேகரன் வீட்டு பெண்களுக்கு அறிவுரை கூறுவது போல் முடிக்கப்பட்டு இருக்கும்.

இந்த நிலையில் ’எதிர்நீச்சல்’ சீரியல் முடிந்தவுடன் தனது மகளின் திருமண வேலைகளை கவனித்துக் கொண்டிருந்த இயக்குனர் திருச்செல்வம் தற்போது மகள் திருமணம் முடிந்த நிலையில் சுற்றுப்பயணத்தில் இருப்பதாகவும் அவர் சுற்றுப்பயணம் முடிந்து வந்தவுடன் ’எதிர்நீச்சல் 2’ ஆரம்பிப்பார் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் ’எதிர்நீச்சல் 2’ வேண்டும் என்று ரசிகர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் இயக்குனர் திருச்செல்வம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’பயணங்களும் மனிதர்கள் சந்திப்புகளும் எப்போதும் நம்மை புதுப்பிக்கும்’ என்று கூறியுள்ளார். இதனை அடுத்து புதுமையான கதை அம்சத்துடன் ’எதிர்நீச்சல் 2’ சீரியல் வரப்போகிறது என்பதை அவர் மறைமுகமாக கூறியதாக ரசிகர்கள் அதை எடுத்துக் கொண்டு வருகின்றனர். எனவே விரைவில் ’எதிர்நீச்சல் 2’  சீரியல் குறித்து அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement