• Jan 19 2025

எங்க ஆளுங்களை 2 பேரை தொட்டா, 1000 பேர் வருவாங்க.. புஸ்ஸி ஆனந்த் எச்சரிக்கை..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

எங்கள் ஆளுங்களை இரண்டு பேரை தொட்டால் ஆயிரம் பேர் வருவார்கள் என்று காவல்துறையினருக்கு தெரியும் என்று தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தளபதி விஜய் ஆரம்பித்த தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியில் புஸ்ஸி ஆனந்த் பொதுச் செயலாளராக உள்ளார் என்பதும் அவர் சமீபத்தில் கலந்துக்கொண்ட நிகழ்ச்சியில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் தங்கள் கட்சியின் கொடி புதிதாக வைக்கப்பட்டதாகவும் மற்ற கட்சிகளின் கொடியை விட தங்கள் கட்சியின் கொடி இரண்டு அடி அதிகமாக இருந்ததை அடுத்து மற்ற கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர் என்றும் அந்த கொடியை எடுக்க வேண்டும் என்று கூறினார்கள் என்றும் பேசினார்.

அப்போது இந்த பிரச்சனையை அறிந்து காவல்துறையினர் வந்ததாகவும் இது குறித்த பிரச்சினை தெரிந்ததும் தங்கள் கட்சியை சேர்ந்த இரண்டு இளைஞர்களும் அந்த இடத்திற்கு வந்ததாகவும் காவல்துறையினர் அந்த இளைஞர்களை நீங்கள் இருந்து கிளம்புங்கள், உங்கள் கட்சி கொடிக்கு எதுவும் ஆகாது என்று சொன்னதாகவும் பேசினார்.

அப்போது மற்ற கட்சியினர் நாங்கள் இத்தனை பேர் இருக்கிறோம், ஆனால் அந்த இரண்டு பேருக்கு பயந்து நீங்கள் எதற்காக அவர்களை சமாதானப்படுத்துகிறீர்கள் என்றும் கேள்வி கேட்டபோது அவர்கள் ரெண்டு பேரை தொட்டால், ஆயிரம் பேர் வருவார்கள், ஏனென்றால் அவர்கள் விஜய் ரசிகர்கள்’ என்று அந்த காவல்துறை அதிகாரி தெரிவித்ததாகவும் பேசினார்.

எனவே நமது படைபலம் அதிகம் என்றும், நமக்கு இருக்கும் செல்வாக்கு அதிகம் என்றும், தங்கள் கட்சியினரை தொட்டால் ஆயிரம் பேர் வருவார்கள் என்றும் அர்த்தத்தில் புஸ்ஸி ஆனந்த் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement