• May 18 2024

பிரமாண்டாக நடைபெற்ற மஹா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா- கியூட்டாக இருக்கிறாங்களே ஹன்சிகா

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியான படிக்காதவன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியவர் தான் நடிகை ஹன்சிகா. இவர் தமிழில் விஜய் ,சூர்யா, கார்த்தி, விஷால் எனப் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

தொடர்ந்து சில காலம் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் தற்பொழுது கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள சோலோ ஹீரோயினாக பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.அந்த வகையில் இவரது நடிப்பில் தற்பொழுது உருவாகியுள்ள திரைப்படம் தான் மஹா.

இப்படத்தை ‘ரோமியோ ஜூலியட்’ படத்தின் இயக்குநர் லக்ஷ்மணிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய யு.ஆர்.ஜமீல் இயக்கியுள்ளார். எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் மதியழகன் என்பவர் தயாரித்துள்ளார்.

இப்படத்தில் ஹன்சிகா லீட் ரோலில் நடித்துள்ளார் சிம்புவும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் ஹன்சிகாவின் 50வது படமாகும். அத்தோடு இவருடன் ஸ்ரீகாந்த், கருணாகரன், தம்பி ராமைய்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.ஏற்கனவே இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

இந்த நிலையில் இன்றைய தினம் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் நடிகை ஹன்சிகா உட்பட படக்குழுவினர் பங்குபற்றியுள்ளனர். இது குறித்த புகைப்படம் வெளியாகி வைரலாகி வருவதைக் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement