• May 18 2024

பிரபல ஓடிடித் தளத்தில் வெளியாகவுள்ள வீட்ல விசேஷம்'திரைப்படம்-எப்போது தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபல்யமானவர் தான் ஆர்ஜே பாலாஜி. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் தான் வீட்ல விசேஷம்'இப்படத்தில் கதாநாயகியாக அபர்ணா தாஸ் நடித்திருந்தார்.

இப்படத்தை ஆர் ஜே பாலாஜியுடன் இணைந்து என்ஜெ சரவணனும் இயக்கியிருந்தார்.சத்யராஜ்ஆர்ஜே பாலாஜியின் அப்பாவாகவும் ஊர்வசி அம்மாவாகவும் நடித்திருந்தனர். இந்தியில் சூப்பர் ஹிட் அடித்த 'பதாய் ஹோ' படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்தப் படம்.

ஜி ஸ்டுடியோஸ் உடன் இணைந்து போனி கபூரின் பேவியூ பிராஜக்ட்ஸ் நிறுவனமும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனமும் இப்படத்தை தயாரித்திருந்தனர்.படம் 300 திரையரங்குகளுக்கு மேல் பிரம்மாண்டமாக வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் வீட்ல விசேஷம் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூலை 15-ம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் அந்தப் படம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement