• Jun 26 2024

விஜய் ,அஜித் பட வில்லனுக்கு திருமணமா..? பொண்ணு இவங்க தானாம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

அஜித்தின் பில்லா-2 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் வித்யுத் ஜம்வால்.

மேலும் இதை தொடர்ந்து விஜய்யின் சூப்பர் ஹிட் படமான துப்பாக்கி படத்தில் வில்லன் வேடத்தில் கலக்கி இவர் பிரபலமானார். இதையடுத்து சூர்யாவுடன் இணைந்து அஞ்சான் திரைப்படத்திலும் நடித்து ரசிகர்களை கவர்ந்தார் இவர்.

இவ்வாறு விஜய்,அஜித்,சூர்யா என பல முன்னணி நடிகர்களோடு நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர்.

தற்போது வித்யுத் ஜம்வால் ஹிந்தி சினிமாவில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார். அவருக்கு கடந்த வருடம் நந்திதா மஹ்தானி என்ற பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

நந்திதா மஹ்தானி பிரபல பேஷன் டிசைனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே விவாகரத்தான அவர் தற்போது வித்யுத் ஜம்வாலை மறுமணம் செய்கிறாராம்.

அத்தோடு வித்யுத் ஜம்வால் மற்றும் நந்திதா திருமணம் இந்த மாதம் லண்டனில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement