தளபதி விஜய் அரசியல் கட்சி தொடங்கியதிலிருந்து தனது சமூக வலைதள பக்கத்தில் வாழ்த்துக்களை மட்டுமே சொல்லி வருவதை அடுத்து அவரை வாழ்த்து சொல்லும் தலைவர் என நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார் என்பதும் அரசியல் கட்சியை அவர் தொடங்கினாலும் அவரது கட்சியின் கொள்கை குறித்து எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அரசியல் கட்சி குறித்த கூட்டம், மாநாடு என்ற என எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் வெறும் ட்விட்டரில் மட்டுமே அவர் அரசியல் செய்து வருவதாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.
அதிலும் கூட மக்கள் பிரச்சனையை பற்றி பேசாமல் இறந்த தலைவர்களுக்கும், தற்போது உள்ள தலைவர்களுக்கும் வாழ்த்து சொல்வதையே அவர் பெரும்பாலும் தனது சமூக வலைத்தள பக்கத்தை பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
அந்த வகையில் சற்றுமுன் மக்களவையின் எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் ராகுல் காந்திக்கு விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இப்படியே போனால் வாழ்த்து சொல்லும் தலைவராக தான் விஜய்யை மக்கள் நினைப்பார்கள் என்றும் ஆக்கபூர்வமாக களத்தில் இறங்கி அவர் மக்கள் பிரச்சனைக்காக போராட வேண்டும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Congratulations to Hon'ble Thiru. @RahulGandhi Avargal for being unanimously elected by @INCIndia and its allies as Leader of Opposition in the Lok Sabha.
My best wishes to serve the people of our Nation.
Listen News!