• Apr 01 2025

சூர்யா தவறவிட்ட 'வணங்கான்'.. மாறுபட்ட நடிப்பில் அடித்து துவம்சம் செய்யும் அருண் விஜய்! வெளியானது டீசர்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் பாலா இயக்கத்தில், நடிகர் அருண் விஜய் நடித்து இருக்கும் வணங்கான் பட டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

இயக்குநர் பாலா ஏற்கனவே சூர்யா நடிப்பில் வணங்கான் படத்தை இயக்கிய போதும், அந்த படம் திடீரென கை விடப்பட்டது. அதன் பின் இந்த படத்திலிருந்து சூர்யா விலகினார். 

இதுபற்றி பாலா வெளியிட்ட அறிக்கையில், 'வணங்கான்' திரைப்படத்தில் இருந்து சூர்யா விலகிக் கொள்வது என, நாங்கள் இருவரும் கலந்து பேசி தான் முடிவெடுத்து இருக்கிறோம். அதில் அவருக்கு வருத்தம் என்றாலும் அவரது நலன் கருதி எடுத்த முடிவு என்று கூறியிருந்தார்.


இதை அடுத்து இந்த படத்தில் சூர்யாவுக்கு பதிலாக அருண் விஜயை நடிக்க வைத்துள்ளார் பாலா. அவருக்கு ஜோடியாக ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளார். மேலும் இதில் மிஷ்கின், சமுத்திரகனி முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்து  உள்ளார்கள்.


தற்போது வெளியான டீசரின் அடிப்படையில், அருண் விஜய் மொத்தமாக உருமாறி நடித்துள்ளார்.  பரட்டை தலையுடன் கூடிய வினோதமான ஒரு மனிதனாக, மனித உணர்வுகளை அதிகம் வெளிப்படுத்தாத ஹீரோவாக காட்டப்பட்டுள்ளார்.

மேலும், முரட்டுத்தனமான ஒரு கதாபாத்திரத்தில், அனைவரையும் அடித்து துவம்சம் செய்வது இறுதியில் உறுமுவது என அமர்க்களம் ஆக அருண் விஜயை  ஹீரோவாகியுள்ளார் பாலா.

எதையும் கணிக்க முடியாத வகையில் வசனங்கள் இல்லாமல் நகரும் இந்த டீசரில், கிணற்றிலிருந்து ஒரு கையில் பெரியார் சிலையும் மறு கையில் பிள்ளையார் சிலையும் சுமந்தபடி மேல எழுந்து வருகிறார் அருண் விஜய். இதோ வெளியான டீசர்.



Advertisement

Advertisement