• May 21 2024

தளபதி 68 படம் குறித்து வெளியாகிய சூப்பர் அப்டேட்- இப்படியொரு காரெக்டரில் தான் நடிக்கின்றாரா?

stella / 9 months ago

Advertisement

Listen News!


நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜுடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்து உருவாகியுள்ள திரைப்படம் தான் லியோ. இப்படத்தில் சஞ்சய் தத், அர்ஜூன், மிஷ்கின், கௌதம் மேனன், பிரியா ஆனந்த் உள்ளிட்டவர்கள் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ளனர். 

காஷ்மீர், சென்னை, தலக்கோணம் என அடுத்தடுத்த இடங்களில் படத்தின் சூட்டிங் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. படத்தின் சூட்டிங்கை படக்குழுவினர் நிறைவு செய்துள்ளனர்.இதனை அடுத்து விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68வது படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.


ஆக்ஷன் என்டர்டெயின்மெண்ட் ஜானரில் உருவாகவுள்ள இப்படத்தின் ஷுட்டிங் அக்டோபர் மாதத்தில் ஆரம்பமாகவுள்ளதாக கூறப்படுகின்றதுஇப் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது நடந்து வரும் நிலையில் , இன்னொரு பக்கம் தளபதி68 படத்தின் முதற்கட்ட பணிகளையும் வெங்கட் பிரபு செய்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது ஒரு புது அப்டேட் தளபதி 68 படம் பற்றி வெளியாகி இருக்கிறது. விஜய் இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளாராம்.மெர்சல் படத்திற்குப் பிறகு விஜய் இரட்டை ரோலில் நடிப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement