• Apr 28 2024

சூப்பரு...வெறித்தனமாக வெளிவந்த KGF 3 அறிவிப்பு...! செம குஷியில் ரசிகர்கள்...! தீயாய் பரவும் வீடியோ இதோ!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம்  KGF திரைப்படம்.  இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து  KGF  2 கடந்த ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி வெளிவந்தது.

முதல் பாகத்தை விட மாபெரும் வெற்றியடைந்த  KGF  2 பாக்ஸ் ஆபிஸில் இதுவரை கன்னட திரையுலகம் கண்டிராத வசூல் சாதனையை படைத்தது.

குறிப்பாக பாலிவுட் பாக்ஸ் ஆபிஸில் மட்டுமே சுமா ரூ. 500 கோடிக்கும் மேல் இப்படம் வசூல் செய்தது.கே.ஜி.எஃப் 2 படத்தின் இறுதியில்  KGF  3 படத்திற்காக ஹின்ட் ஒன்றை இயக்குநர் கொடுத்திருப்பார். இதனால் கண்டிப்பாக  KGF 3 வெளிவரும் என ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், இன்றுடன்  KGF  2 வெளிவந்த ஒரு வருடம் ஆகியுள்ள நிலையில், அதை கொண்டாடும் விதமாக வீடியோ ஒன்றை அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த வீடியோவின் இறுதியில், யாரும் எதிர்பார்க்காத விதமாக  KGF  3 படத்திற்கான அறிவிப்பை மறைமுகமாக வெளியிட்டுள்ளனர். இதனால் ரசிகர்கள் செம குஷியில் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement