2016ம் ஆண்டு ஐரா, கபாலி, காஞ்சனா 3 போன்ற படங்களில் சிறிய ரோல்களில் நடித்த இவர், சன் டிவியில் 2021ம் ஆண்டு தொடங்கிய சுந்தரி சீரியலில் நாயகியாக நடித்தார். அந்த சீரியல் கடந்த ஆண்டு முடிவுக்கு வந்த பின்னர் இவர் தான் கர்ப்பமாக உள்ளதை புகைப்படங்களுடன் சமூக ஊடகங்களில் பகிர்ந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் நடிகை கேப்ரில்லாவின் கோலாகலமான வளைகாப்பு விழா நடந்தது. இந்த விழாவுக்கு சுந்தரி சீரியலில் நடித்த அவருடைய சக நடிகர்களும் கலந்துகொண்டு கேப்ரில்லாவை வாழ்த்தினர். அவர்களின் அன்பு மற்றும் பரிவுடன் actress கேப்ரில்லா இந்நிகழ்வை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகப் பரவி வந்தது.
இது மட்டுமல்ல கேப்ரில்லா தனது கிராமத்தில் பல போட்டோஷுட்கள் நடத்தி அவற்றை தனது சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்திருந்தார். தற்போது தனது வளைகாப்பில் மருதாணி போட்ட கையுடன் போட்டோசூட் நடாத்தி அதனை தனது பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.புகைப்படங்கள் இதோ..
Listen News!