ஜான் இயக்கத்தில் கலைப்புலி s .தாணு தயாரிப்பில் விஜய் மற்றும் ஜெனீலியா நடிப்பில் 2005 ஆம் வெளியாகிய இந்த படம் தற்பொழுது ரீரிலீஸ் கலாச்சாரத்தில் வெளியாகவுள்ளதாக தயாரிப்பாளர் பதிவிட்டிருந்தார். விஜய் ரசிகர்கள் இந்த செய்தி கேட்டதும் மிகவும் குஷியில் இருந்து வருகின்றனர்.
இந்த படத்தில் ஜெனிலியாவின் நடிப்பு இளசுகளின் கவனத்தினை ஈர்த்தது. அன்று பார்த்தது போன்று இன்றும் மிகவும் ஜோலியாக வாழ்ந்து வருகின்றார். குறித்த செய்தியினை கேள்விபட்டதும் தயாரிப்பாளர் தாணுவின் பதிவிற்கு தனது அன்றைய நிகழ்வுகளினை பகிர்ந்துள்ளார்.
குறித்த பதிவில் நடிகை "எனக்கு சச்சினை கொடுத்து, படப்பிடிப்பு முழுவதும் என்னை நன்றாக நடத்தியதற்கு நன்றி ஐயா.. இதுவரைக்கும் என்னுடைய சிறந்த படப்பிடிப்பில் இதுவும் ஒன்று.Sachein - Has my heart always " என பதிவிட்டுள்ளார். மற்றும் விஜய் நடிப்பில் வெளியாகிய காதலுக்கு மரியாதை திரைப்படமும் ரீரிலீஸ் பணிகள் முடிவடைந்து வெளியீட்டிற்கு தயாராக இருப்பதாக தெரியவந்துள்ளது.
Listen News!