பிரபல தமிழ் நடிகை சுருதிகாஷன் சமீபத்தில் தனது சமூக ஊடகப் பக்கத்தில் ஒரு முக்கிய கருத்தை பகிர்ந்துள்ளார். "மக்கள் மற்றவர்களை அவர்களின் தோற்றத்தை வைத்து மதிப்பிடக்கூடாது" என்று அவர் கூறியுள்ளார். இதன் மூலம் தோற்றத்தை அடிப்படையாக வைத்து பிறரை ஆழமாகத் தீர்மானிப்பது தவறானது என்பதை அவர் கூறியுள்ளார்.
அவரது கருத்துக்களில் மேலும் "அறுவை சிகிச்சை மூலம் உடலில் மாற்றங்களை கொண்டு வருவதில் எந்த தவறும் இல்லை. அது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம். அது மற்றவர்களின் கட்டாயமின்றி செய்யும் வரை, அவர்கள் செய்யும் அந்த மாற்றங்களை விமர்சிப்பதோ அல்லது தவறாக கருதுவதோ சரியானது அல்ல" என்றும் கூறியுள்ளார்.
இதை விட அவர் "ஒருவரின் உடலை அல்லது அழகை விமர்சிப்பது தவறு. இது அவர்களின் தனிப்பட்ட விஷயம். எதை அவர்களால் விரும்பி செய்ய முடியுமோ, அதை செய்ய அனுமதி வழங்க வேண்டும்" என்று கூறியுள்ளார். மற்றும் சமீபத்தில் இவரது திருமணம் குறித்த கேள்விக்கு பதிலளித்த ஒரு வீடியோவும் செம வைரலாகியிருந்தது.இந்த நிலையில் தற்போது இந்த செய்தியும் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Listen News!