• Jun 16 2024

வாணிபோஜனுக்கு ஒரு 100 கோடி ரூபாய் படம் பார்சல்.. சுந்தர் சி எடுத்த அதிரடி திரைப்படம்..!

Sivalingam / 3 weeks ago

Advertisement

Listen News!

தமன்னா மற்றும் ராஷி கண்ணா நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் உருவான ’அரண்மனை 4’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நூறு கோடி ரூபாய் வசூல் செய்துள்ள நிலையில் சுந்தர் சி அடுத்த படத்தில் வாணி போஜன் நடிக்க இருப்பதாகவும் இந்த படமும் 100 கோடி ரூபாய் வசூல் செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சுந்தர் சி இயக்கத்தில் ’கலகலப்பு’ மற்றும் ’கலகலப்பு 2 ’ ஆகிய இரண்டு வெற்றி படங்கள் வெளியான நிலையில் அடுத்ததாக அவர் ’கலகலப்பு 3’ படத்தை இயக்க இருப்பதாகவும் இந்த படத்தின் நாயகியாக வாணி போஜன் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான ’கலகலப்பு’ திரைப்படத்தில் விமல், சிவா, அஞ்சலி, ஓவியா நடித்தனர் என்பதும் 2018 ஆம் ஆண்டு வெளியான ’கலகலப்பு 2’ படத்தில் ஜீவா, ஜெய், சிவா, நிக்கி கல்ராணி, கேத்ரின் தெரசா நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ’கலகலப்பு 3’ படத்தில் மீண்டும் முதல் பாகத்தில் நடித்த விமல், சிவா நடிக்க இருக்கும் நிலையில் இந்த படத்தில் தற்போது வாணி போஜன் இணைந்து இருப்பதாகவும் இவர் இந்த படத்தின் நாயகியாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
ஏற்கனவே வாணி போஜன் ’பகைவனுக்கு அருள்வாய்’ ’கேசினோ’ ’ஆரியன்’ ஆகிய திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதும் இந்த நிலையில் சுந்தர் சி படத்திலும் அவர் இணைய உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

’கலகலப்பு’ மற்றும் ’கலகலப்பு 2’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் வசூலில் சாதனை செய்த நிலையில் ’அரண்மனை 4’ போலவே ’கலகலப்பு 3’ படமும் மிகப்பெரிய வசூலை செய்யும் என்றும் நிச்சயம் 100 கோடி ரூபாய் வசூல் உறுதி என்றும் திரையுலக வட்டாரங்கள் கூறி வருகின்றன.

Advertisement

Advertisement