• Jun 16 2024

’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முதல் சீசன் நடிகருடன் சுற்றும் ஹேமா.. செம்ம வருமானம் போல..!

Sivalingam / 3 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முதல் சீசனில் மீனா என்ற கேரக்டரில் நடித்திருந்த ஹேமா தற்போது இரண்டாவது சீசனில் மீனா என்ற கேரக்டரில் நடித்து வருகிறார் என்பதும் அவரது கேரக்டர் சீரியலில் முக்கியத்துவத்தை தரும் வகையில் உருவாக்கப்பட்டிருப்பதால் இவரது நடிப்பிற்கும் தீனி கிடைக்கிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

 பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முதல் சீசனில் வெங்கட் மற்றும் ஹேமா ஆகிய இருவரும் தான் ஜீவா மற்றும் மீனா கேரக்டரில் நடித்திருந்தனர் என்பதும் இவர்கள் இருவரின் கெமிஸ்ட்ரி அசத்தலாக இருந்தது என்பதும் தெரிந்தது. ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் வெங்கட் நடிக்கவில்லை என்றாலும் தற்போது அவர் ’கிழக்கு வாசல்’ என்ற சீரியலில் நடித்து வருகிறார் என்பதும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது என்றும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த நிலையில் ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முதல் சீசனில் தன்னுடன் நடித்த நடிகர் வெங்கட் உடன் ஹேமா அதிகமாக பார்க்க முடிகிறது என்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது வெங்கட் மற்றும் ஹேமா ஆகிய இருவருக்கும் தற்போது விளம்பர வாய்ப்புகள் அதிகம் வருவதாகவும் இருவரும் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று பல ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் அணுகுவதாகவும் இதன் மூலம் வெங்கட், ஹேமா ஆகிய இருவருக்கும் நல்ல வருமானம் கிடைத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் வெங்கட் மற்றும் ஹேமா ஆகிய இருவருமே பல ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் விளம்பரங்களில் நடிக்க ஒப்புக் கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement