• May 21 2024

TRPல் முதலிடத்திற்கு வந்த சன் டி.வி சீரியல்! திடீரென சறுக்கிய சிறகடிக்க ஆசை சீரியல்

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நாடகம்  தான் சிறகடிக்க ஆசை. இந்த நாடகம் ஆரம்பித்த நாளிலிருந்து விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருப்பதோடு இதில் நடித்து வருபவர்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் இருக்கின்றனர். 

இந்த நிலையில், சிறகடிக்க ஆசை நாடகம்  ரசிகர்கள் யாரும் எதிர்பாராத வகையில் 10 -வது இடத்துக்கு சற்று சறுக்கியுள்ளது.

இந்திய தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு இடையே ஒரு பெரும் போட்டியே நிலவி வருகிறது. 

அந்த வகையில், இந்த வாரம் TRPயில் யார் முதல் இடத்தைப் பிடிப்பது என்பதுதான் அந்தப் போட்டி. 

அதன்படி, கடந்த வாரம் முதல் இடத்தைப் பிடித்த  சிறகடிக்க ஆசை நாடகம்  யாரும் எதிர்பாராத வகையில், இந்த வாரம் 10 வது இடத்திற்கு சறுக்கியுள்ளது. 

அதேவேளை, சன் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகியுள்ள கயல் நாடகம் கடந்த வாரம்  TRP யில் முதல் இடத்தைப் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement