சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வேட்டையன் படத்தை தொடர்ந்து கூலி படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன், நாகார்ஜுனா, உபேந்திரா, அமீர்கான், சத்யராஜ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடிக்கும் நடிகர்களில் பெயரையும் பட குழுவினர் போஸ்டர் மூலம் வெளியிட்டிருந்தனர். மேலும் இதன் படப்பிடிப்புகள் ஹைதராபாத், சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்று உள்ளது.
d_i_a
கூலி திரைப்படத்தின் படப்பிடிப்புகள் 80 சதவீதம் முடிவடைந்துள்ளதாகவும் மொத்த ஷூட்டிங்கும் மார்ச் மாதத்திற்குள் முடிவடைந்து விடும் என்றதாலும் இந்த படம் விரைவில் திரைக்கு வரும் என தகவல்கள் வெளியாகி இருந்தன. இது ரஜினி ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.
மேலும் இந்த ஆண்டு மே மாதம் முதலாம் தேதி உழைப்பாளிகளின் தினத்தை முன்னிட்டு கூலி படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. ஆனாலும் இது தொடர்பில் அதிகாரபூர்வமான அறிவிப்பு ஒன்றையும் பட குழுவினர் வெளியிடவில்லை.
இந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகியுள்ள கூலி திரைப்படம் ஆயுத பூஜை மற்றும் தீபாவளியை முன்னிட்டு வெளியிடுவதற்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாம். தொடர் விடுமுறையை குறிவைத்து தற்போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Listen News!