• May 19 2024

விடுதலை பட ஷுட்டிங் தளத்தில் ஏற்பட்ட திடீர் விபத்து- உயிரிழந்த முக்கிய பிரபலம்- கடும் அதிர்ச்சியில் திரையுலகம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குநர்களில் முக்கியமானவர் தான் வெற்றிமாறன். இவர் தற்பொழுது நடிகர் சூரியை வைத்து விடுதலை என்னும் படத்தை இயக்கி வருகின்றார். இப்படத்தில் விஜய் சேதுபதியும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

குறுகிய பட்ஜெட்டில் எடுப்பதாக திட்டமிட்ட இப்படம் பின்னர் விஜய் சேதுபதி இணைந்ததால் பட்ஜெட்டை அதிகமாக்கியதோடு இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.இந்த படத்தின் ஷுட்டிங் நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. 


இந்நிலையில் தற்போது சென்னையில் ஷுட்டிங் நடந்த போது ஒரு விபத்து ஏற்பட்டு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வந்திருக்கிறது.இன்று சென்னை கேளம்பாக்கத்தில் ஷுட்டிங் நடந்து வந்தது. அப்போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டிருக்கிறது.

ரோப் கயிறு அறுந்து விழுந்ததில் சண்டை பயிற்சியாளர் சுரேஷ் உயிரிழந்திருக்கிறார். இந்த சம்பவம் சினிமா துறையில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 

Advertisement

Advertisement