• Jan 19 2025

பிக்பாஸ் வீட்டிற்குள் இப்படியொரு ரொமான்ஸா?- காதலியுடன் எல்லை மீறும் போட்டியாளர்- வைரலாகும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே கிசுகிசுக்களுக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் ஷோ எனலாம்.முதல் சீசனில் இருந்து ஆரவ் – ஓவியா, ஹரிஷ் கல்யாண் – ரைசா வில்சன், கவின் – லாஸ்லியா, பாலாஜி முருகதாஸ் – ஷிவானி நாராயணன் என காதல் கன்டென்ட் ஒவ்வொரு சீசனிலும் இருந்துக் கொண்டு தான் இருக்கிறது.

இவர்களில் பாவனி- அமீர் இருவரும் தான் பிக்பாஸ் வீட்டை  விட்டு வெளியேறிய பின்னரும் காதலர்களாக வலம் வருகின்றனர். இவர்களின் திருமணம் விரைவில் நடைபெறும் என்றும் கூறப்படுகின்றது.தற்பொழுது ஒளிபரப்பாகும் 7வது சீசனில் நிக்ஷன், ஐஸ்வர்யாவின் காதல் கதை பெரிய அளவில் பேசப்பட்டது.


தமிழ் பிக்பாஸில் பெரிய அளவில் தவறுகள் நிகழ்வதில்லை, ஆனால் ஹிந்தி பிக்பாஸில் சொல்லவே தேவையில்லை. போர்வைக்குள் பாய்வது, கட்டிப்பிடிப்பது, கண்ட இடங்களில் தொடுவது என எல்லை மீறி என்ஜாய் பண்ணுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

அந்த வகையில் ஹிந்தியில் 17வது சீசன் ஒளிபரப்பாகி வருகின்றது.நடிகை இஷா மால்வியா பிக் பாஸ் வீட்டில் ஆரம்பத்திலேயே போட்டியாளராக வந்த நிலையில், அவரது காதலர் சமர்த் ஜூரெல் இரண்டாவது வாரத்தில் போட்டியாளராக வைல்ட் கார்டு என்ட்ரியில் வந்தார்.


இஷா மால்வியா மற்றும் சமர்த் இருவரும் பிக் பாஸ் வீட்டில் எல்லைமீறுவது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இஷா மால்வியாவுக்கு அவரது காதலர் கட்டாயப்படுத்தி முத்தம் கொடுக்கும் வீடியோ தற்போது வெளியாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது


Advertisement

Advertisement