• Jan 15 2025

லைகா விடுத்த கடும் எச்சரிக்கை.. மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்!

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

பிரபல இயக்குனர் சங்கர் - உலக நாயகன் கமலஹாசனின் கூட்டணியில் லைகா தயாரிப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் இந்தியன் 2 திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான போதும் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இதை தொடர்ந்து அடுத்ததாக ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன் மற்றும் அஜித்தின் விடாமுயற்சி படங்களை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படமும் இந்த ஆண்டிலேயே வெளியாக  உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், லைகா நிறுவனம் தனது எக்ஸ் தள பக்கத்தில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதாவது வேட்டையன் படத்தின் ரிலீஸை எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்களுக்கு லைகா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தங்களது நிறுவனத்தின் பெயரில் நடிகர்களின் தேர்வு குறித்து போலி விபரங்கள் தொடர்ந்து வெளியிடப்படுவதாகவும் இது தங்களின் கவனத்திற்கு தெரிய வந்துள்ளதாகவும் இவ்வாறு நடந்து கொள்வோர்கள் மீது  கடமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் லைகா தெரிவித்துள்ளது.

அதாவது, லைகா ப்ரொடக்ஷன் என்ற பெயரில் பல அதிகாரபூர்வ மற்றும் அதிகார தேர்வுக்கான விளம்பரங்கள் பரவி வருவதை குறிப்பிட்டுள்ளது.

மேலும் தமது அதிகார பூர்வ சமூக வலைதள பக்கங்கள் மூலமே தங்களது நிறுவன தயாரிப்பின் கீழ் எடுக்கப்படும் படங்களுக்கான காஸ்டிங் கால்கள் அல்லது ஆடிஷன்கள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

அது மட்டும் இன்றி சட்டத்திற்கு புறம்பாக நடந்து கொள்ளுபவருக்கு அல்லது ஏஜென்சிகள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisement

Advertisement