சிம்பு நடிக்க இருக்கும் 48வது திரைப்படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்க இருப்பதாகவும் இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது.
அதன் பின்னர் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் சில மாதங்கள் நடைபெற்றதாகவும் சிம்பு வெளிநாட்டுக்கு சென்று இந்த படத்தின் கேரக்டருக்காக தயாராகி வந்ததாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் மே மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க வேண்டிய நிலையில் படப்பிடிப்பு காலதாமதம் ஆகிக்கொண்டே வந்த நிலையில் திடீரென கமல்ஹாசனின் ’தக்லைஃப்’ திரைப்படத்தில் சிம்பு இணைந்தார் என்றும் அதன் பிறகு ’எஸ்.டி.ஆர் 48’ குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கமல்ஹாசன் இந்த படத்தை தயாரிக்கவில்லை என்றும் ராஜ்கமல் பிலிம்ஸ் இந்த படத்தில் இருந்து விலகிக் கொண்டதாகவும் கூறப்பட்டது. இதனை அடுத்து பிரபல தெலுங்கு நிறுவனம் ஒன்றுடன் தேசிங்கு பெரியசாமி பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது கிட்டத்தட்ட இந்த படம் ட்ராப் என்று கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி ’2018’ என்ற மலையாள திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ஜூட் ஜோசப் என்பவர் இயக்கவிருக்கும் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தில் சிம்பு மற்றும் மோகன்லால் இணைந்து நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
எனவே ’தக்லைஃப்’ படத்திற்கு பின்னர் நடிக்க இருக்கும் அடுத்த படத்தில் சிம்பு கமிட் ஆகிவிட்டதால் ’எஸ்டிஆர் 48’ படம் கிட்டத்தட்ட ட்ராப் என்று திரையுலகினர் கூறி வருவதை அடுத்து தேசிங்கு பெரியசாமிக்கு நேரமே சரியில்லை என்றும் கூறப்பட்டு வருகிறது.
Listen News!