• Sep 19 2024

ஏலத்திற்கு வரும் ஸ்ரீதேவியின் புடவைகள்-அந்த பணத்தை என்ன செய்யப்போகிறார்கள் தெரியுயுமா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இந்திய சினிமாவை ஆட்டிப்படைத்த நடிகைகளில் மிக முக்கியமானவர் தான் நடிகை ஸ்ரீதேவி .

இவர் மறைந்துவிட்டாலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் என்று தான் கூறவேண்டும்.


அவர் போனி கபூரை திருமணம் செய்துகொண்ட பிறகு சினிமாவில் இருந்து சிலகாலம் ஒதுங்கி இருந்தார். அதன் பின் பல ஆண்டுகள் கழித்து அவர் நடித்த இங்கிலிஷ் விங்கிலீஷ் படம் நல்ல வரவேற்பை பெற்றது.

ஸ்ரீதேவி இங்கிலிஷ் விங்கிலீஷ் படத்தில் பயன்படுத்திய சேலைகள் தற்போது ஏலம் விடப்படுமென அந்த படத்தின் இயக்குநர் கௌரி ஷிண்டே கூறியிருக்கிறார்.


அதன் மூலம் கிடைக்கும் பணத்தை ஏழை சிறுமிகளின் படிப்புக்கு உதவும் தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக அளிக்க போவதாகவும் தெரிவித்து இருக்கிறார்.


Advertisement

Advertisement