• Sep 17 2024

ரொமான்ஸில் எல்லை மீறும் சிம்பு மற்றும் நயன்தாரா- வல்லவன் படத்தின் நீக்கிய காட்சியின் வீடியோ…!

stella / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டிப் பறப்பவர் நயன்தாரா. இவர் தமிழில் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் எனப் பல உச்ச நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர்.தற்பொழுது சாருகானின் ஜவான் படத்தில் நடித்து வருகின்றார்.

இவர் இயக்குநர் விக்னேஷ் சிவனை பல வருடங்களாக காதலித்து வந்ததோடு சில மாதங்களுக்கு முதல் பிரமாண்டமாகத் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு எந்தவொரு புதிய படத்திலும் இவர் கமிட்டாகவில்லை எனலாம்.


இந்த நிலையில் இவர் குறித்த பழைய தகவல் ஒன்று வைரலாகி வருகின்றது. அதாவது இவர் சிம்புவுடன் இணைந்து நடித்த திரைப்படம் தான் வல்லவன். இப்படத்தில் நயன்தாரா, ரீமாசென், சந்தியா, சந்தானம், பிரேம்ஜி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள்.

இப்படத்தில் நடிக்கும் போது இருவரும் காதலர்களாகவும் இருந்தார்கள்.இந்த நிலையில் இப்படத்திலிருந்து ஒரு சீனை கஃட் பண்ணியிருந்தனர். அதில் .அதில், சிம்பு – நயன்தாரா இருவரும் நெருக்கமாக இருப்பது போன்ற காட்சிகள் இருக்கிறது. இதனால் தான் இந்த சீனை படத்தில் வைக்கவில்லை.


இப்போது டெலிட் சீன் வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.இந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement