• May 20 2024

12 வயது மூத்த நடிகையை திருமணம் செய்து கொள்ளப்போகும் போனிகபூரின் மகன்- அட எப்போது தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் உள்ள முக்கிய தயாரிப்பாளர்களில் ஒருவர் தான் போனிகபூர். இவர் தமிழ், தெலுங்கில் தொடர்ந்து படங்கள் தயாரித்து வருகிறார். அந்த வகையில் தமிழில் இறுதியாக வலிமை திரைப்படத்தைத் தயாரித்திருந்தார்.

மேலும் போனி கபூரின் முதல் மனைவி மகன் அர்ஜுன் கபூரும் பாலிவுட்டில் பிரபல நடிகராக இருந்து வருகிறார். அவர் நடிகை மலைக்கா அரோராவை காதலித்து வருகிறார். இவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது என பாலிவுட் மீடியாவில் செய்தி வெளியாகி இருக்கிறது.

அத்தோடு அவர்கள் திருமணத்தை வரும் குளிர்காலத்தில் நடத்த திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. அர்ஜுன் கபூர் மற்றும் மலைக்கா இருவருக்கும் 12 வயது வித்தியாசம். மலைக்காவுக்கு முதல் திருமணத்தில் பிறந்த மகனுக்கே தற்போது 19 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் இருவரும் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement